பல பகுதிகளில் இன்று பலத்த மழை!

Share

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை முதல் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மேலும் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைத் தயவுடன் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு