மலையகத்தில் மண்சரிவு! 40 வீடுகள் பாதிப்பு!! – எழுவர் காயம்; 220 பேர் நிர்க்கதி

Share

பண்டாரவளை, பூனாகலை – கபரகலைப் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவால் நான்கு லயன் குடியிருப்புகள் பகுதியிளவில் சேதமடைந்துள்ளன. 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் – 03 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் சிக்கிக் காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மண் மேடு சரிந்து விழுந்ததில் 40 வரையான லயன் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காயமடைந்த எழுவரில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனர்த்தத்தில் எதுவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு