நாட்டில் 340 உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றது.
இதன்படி, அந்த நிறுவனங்களின் மாநகர மேயர்கள், நகர முதல்வர்கள், தவிசாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் ஆணையாளர் அல்லது செயலாளரிடம் கையளிக்கப்பட வேண்டும்.
அத்துடன், அந்த நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை இன்றைய தினம் வரை மாத்திரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.