மைத்திரியின் ரிட் மனு ஜூலையில் விசாரணைக்கு!

Share

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டைச் சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய அமர்வு ஜூலை 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ மரிக்கார் ஆகியோர் அடங்கிய இரு உறுப்பினர் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனு மீதான விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை முன்னரே புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் தடுக்க முடியாமல் போனதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தம்மை அழைப்பாணை விடுத்த நோட்டீசை இடைநிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனுவின் மூலம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் மற்றும் புனிதர் சிறில் காமினி ஆகியோர் செய்த முறைப்பாட்டைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சாட்சியங்களின் அடிப்படையில் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை சட்டத்துக்கு முரணானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனக்கு எதிராகக் கோட்டை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறும், அழைப்பாணை செல்லுபடியற்ற உத்தரவு பிறப்பிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி இந்த வழக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஐவர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு