ரயில் கழிவறையில் சிசுவைக் கைவிட்டுச் சென்றதால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காதலர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை நன்னடத்தை அதிகாரி விடுத்த கோரிக்கையின் பிரகாரம், சிசுவின் போஷாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைக் கருத்தில்கொண்டு அதனைப் பெற்றோரிடம் (காதலர்களிடம்) ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பண்டாரவளை நன்னடத்தை அதிகாரியின் கடுமையான கண்காணிப்பின் கீழ் சிசுவைக் குறித்த பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.