முன்னாள் எம்.பி. பியசேன விபத்தில் மரணம்!

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் 40ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர் கல்முனை வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதிக்கொண்ட விபத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்தை அடுத்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பி.எச். பியசேன, 2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.

எனினும், பின்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அவர் இணைந்து கொண்டார்.

அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு