இராணுவப் பயிற்சி வழங்கும் இலங்கைக்கு நன்றி தெரிவித்த மாலைதீவு (Photo)

Share

இலங்கையிலுள்ள இராணுவப் பயிற்சி நிறுவனங்களால் மாலைதீவு பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அலி பாயிஸ் பாராட்டு தெரிவித்தார்.

இலங்கை தமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உயர்தர மற்றும் தரமான பயிற்சிகளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று மாலைதீவு மக்கள் அவர்களின் பல்வேறு தேவைகளுக்காக இலங்கைக்கு வரும் சந்தர்பங்களில் இலங்கை அதிகாரிகளால் அவர்களுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்புக்காக உயர்ஸ்தானிகர் பாயிஸ் தனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த தூதுவரை, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார் .

இருவருக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது மாலைதீவு உயர்ஸ்தானிகர் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார்.

மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு அமைச்சுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயமாகவும், இலங்கையில் தனது பணிகளை புதிதாக பொறுப்பேற்ற பின்னர் பாதுகாப்பு செயலாளருடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாகவும் இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு