தீர்வு வழங்கும் வரையில் போராட்டம் தொடரும்! – பல்கலை விரிவுரையாளர்களின் சம்மேளனம் அறிவிப்பு

Share

எமக்கான தீர்வு வழங்கப்படும் வரையில் நாம் முன்னெடுத்து வருகின்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று எட்டாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனத்தின் உப தலைவர் கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் தெரிவித்ததாவது:-

“நாம் போராட்டத்தைத் தொடங்கி வாரமொன்று கடந்துவிட்டது. ஆனால், எமது கோரிக்கைகள் தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டபோதும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை.

ஆகக்குறைந்தது எமது கோரிக்கைகள் தொடர்பில் உத்தரவாதங்களையாவது வழங்கியிருக்க முடியும். ஆனால், ஆட்சியாளர்கள் அவ்வாறான எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. ஆகவே, நாம் எமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை.

எமது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். அது கைவிடப்பட்டுள்ளதாக வெளியிடப்படும் தகவல்களில் உண்மையில்லை” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு