சிறைச்சாலைகளிலுள்ள விசேட தேவையுடைய கைதிகளுக்கு விசேட குழுவொன்றின் பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே நீதி அமைச்சர் இதனைக் கூறினார்.
அத்துடன், வயதான மற்றும் சுகாதார தேவையுடைய கைதிகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.