வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டெழுந்து பொதுமக்களுக்கான வருமான நிலைமையை வலுப்படுத்துவதன் ஊடாக மாத்திரமே அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
தேர்தல்கள் ஆணையாளர் எந்தவித உறுதியான முடிவுகளையும் எடுக்க முடியாதவராகவும், வெறுமனே திகதியை மாத்திரம் அறிவிக்கக் கூடியவராகவும் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
“சுமந்திரன் வெளியிடும் கருத்துக்களின் தெளிவில்லை. தமிழரசுக் கட்சி தாங்களாக தீர்மானங்களை மேற்கொண்டு கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.