இவ்வருட ஆரம்பத்தின் முதல் இரண்டு மாதங்களில், இலங்கையில் 8 ஆயிரத்து 422 ஸ்மார்ட்போன்கள் திருடப்பட்டு அல்லது தொலைந்து போயுள்ளன என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொலைந்த தொலைபேசிகளை மீட்பதற்காகப் பொலிஸார் 2018 டிசம்பர் 31 ஆம் திகதி முதல் ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் தமக்கு மொத்தமாக ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 451 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, 2019 ஆம் ஆண்டில், 40 ஆயிரத்து 167 கைபேசிகளும், 2020 ஆம் ஆண்டில் 12 ஆயிரத்து 567 கைபேசிகளும், 2021 ஆம் ஆண்டில் 27 ஆயிரத்து 933 பேசிகளும் திருடப்பட்டு அல்லது தொலைந்து போயுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைந்து போன தொலைபேசிகள் குறித்து தமக்குக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் உரிய பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.