புதிய தமிழ்க் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தினத்திலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய அமைப்புக்களை ஒன்றிணைத்து புதிய தமிழ்க் கூட்டணி அமைக்கப்படவுள்ளது.
தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்வதே அதன் முக்கிய நோக்கமாகும்” – என்றார்.