இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெற்றோலிய உற்பத்திப் பொருள்களின் விலைகள் குறைவடையலாம் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறைவடையும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.