“இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள்.
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
“இலங்கையை ஆண்ட – ஆளுகின்ற தலைவர்கள் நாட்டைச் சீர்குலைத்துள்ளார்கள். நாட்டை அவர்கள் சீர்படுத்தவில்லை. அவர்கள் இன்னும் நாட்டைச் சீர்குலைப்பார்களானால் மக்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவார்கள்; போராடுவார்கள்; நெருக்குவாரங்களைக் கொடுப்பார்கள். ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள். இதைத் தற்போதைய தலைவர்கள் உணர்ந்து சுயநலத்தைக் களைந்து பொதுநலத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும்” – என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ‘விழிகள்’ இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு விபரம் காணொளி வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.