தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் வெற்றிடத்துக்குத் தான் விண்ணப்பித்துள்ளார் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்காக விண்ணப்பங்களைக் கோர அரசமைப்பு பேரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது.
இதற்கான விண்ணப்பக்காலம் கடந்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.