சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை விடுவிக்கக் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.