பண்டாரவளை, மல்வத்த தோட்டப் பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது .
குறித்த தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.
இதன்போது சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 19 பெண்களும் , 3 ஆண்களும் அடங்குகின்றனர் .
அவர்கள் பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
தடுப்புத் தொகுதி செயற்படாமல் போனமையால் குறித்த லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.