முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக சென்று மஹிந்தவை கொலை செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கிரிவெல பகுதியை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.