நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், அதற்கான காரணங்களை தாம் விளக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.