வரவு- செலவு திட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்டனம்

Share

வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டணம் வெளியிட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விசாரணையே எமக்கு தேவை, நிதி எமக்கு தேவையில்லை, நீதியே வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி சுமார் 14 வருடங்களுக்க மேலாக தொடர்ச்சியாக போராடி வருகின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச விசாரணையே தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் பார்வையில் தங்களுடைய போராட்டம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக இம்முறை வெளியிடப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் விசனம் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/4lqMN-PtY6Q

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு