ராஜபக்ஷர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நாட்டு மக்கள் 1,50,000 ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும்

Share

பொருளாதார பாதிப்புக்கு கோட்டபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, பி.பி ஜயசுந்தர, லக்ஷ்மன், கப்ரால், ஆடிகல உட்பட நாணய சபை பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்.

இந்த ஏழு பேருக்கு எதிராக நாட்டு மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து 1,50,000 ரூபா நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு இவர்கள் தான் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.

கடந்த மூன்று வருடமாக இதனையே குறிப்பிட்டோம். எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உயர்நீதிமன்றத்துக்கும், மனுதாரர்களுக்கும் தலை வணங்குகிறோம்.

நாட்டு மக்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக உண்மையை வெளிப்படுத்தியதற்கு மதிப்பு தெரிவிக்கிறோம்.

இலங்கையில் 22 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்துக்கு சென்று இந்த ஏழு பேரிடமிருந்து 1,50,000 ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் இந்த மனுதாரர்களுக்கு ராஜபக்ஷர்கள் உட்பட ஏழு பேரும் 1,50,000 ரூபா செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே நாட்டு மக்கள் எவரும் ராஜபக்ஷர்கள் உட்பட ஏழு பேருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். என்றார்.

https://youtu.be/4lqMN-PtY6Q

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு