மொட்டுக் கட்சியின் ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெற இடமளிக்கமாட்டோம்

Share

இது மொட்டுக் கட்சியின் ஆட்சி, இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி இடம்பெற இடமளிக்கமாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவற்றை தீர விசாரிக்க வேண்டும். அதன்பின்னர்தான் ஒரு முடிவுக்கு வர முடியும்.

நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களின் வயிற்றில் அடிக்கக்கூடாது.

கடந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டார்கள் என்பது உண்மை. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிரணியில் அன்று குளிர்காய முற்பட்டனர்.

ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. ஆட்சியின் உயர் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டாலும் மொட்டுக் கட்சியின் ஆட்சி தொடர்கின்றது. நாட்டின் பொருளாதாரம் வழமைக்குத் திரும்பி வருகின்றது எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு