மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
உறங்கும் ஆட்சியாளர்களே வைத்தியர்களுக்கான பொருளாதார நியாயத்தை ஏற்படுத்துவோம் இலவச சுகாதார சேவையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரதான வாயில் முன்பாக பிரதான வாயிலை வழிமறித்து தமிழ் மற்றும் சிங்களத்தில் கோரிக்கையடங்கிய பதாதைகளை எழுதியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
குறித்த கவனிப்பு போராட்டத்தில் 18 வைத்தியர்கள் கலந்து கொண்டிருந்தத்துடன் வைத்தியசாலையும் ஏனைய வைத்தியர்களும் உரிய சேவையில் ஈடுபட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.