செந்தில் தொண்டமானுக்கும்-புதிய தூதுவர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு!

Share

இலங்கைக்கான புதிய தூதுவர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையே ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் (07) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின் போது சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், கைத்தொழில் பேட்டை ஸ்தாபிப்பு , கனிமத் துறைகளின் அபிவிருத்தி, கூட்டு முயற்சி விவசாய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி ஆகிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு