தமிழ் சமூகம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் ஜனாதிபதி ரணில் நிறைவேற்றவில்லை

Share

தமிழ் சமூகம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்த போதும் அவை நிறைவேற்றப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தாலும், அரச திணைக்களங்களாலும் தமது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை மற்றும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடி, 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை உறுதி செய்வதாக தெரிவித்திருந்த போதும் அது இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு