புத்தளம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த கடும் மழையினால் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய தெரிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கடும் மழையினால் பாலாவி குவைட் நகர், ரத்மல்யாய, நாகவில்லு ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான வீடுகளுக்குல் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 30 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.