பலஸ்தீனின் – காஸா மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்களை நிறுத்தக்கோரி வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்….
மத்திய கிழக்கில் காஸாமீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இத்தாக்குதல் மூலம் 4000க்கு மேற்பட்ட குழந்தைகளும் 4000க்கு மேற்பட்ட பொதுமக்களும் பலியாகி யுள்ளனர். இத்தருணத்தில் தொடர்ச்சியாக அமெரிக்காவும் -இஸ்ரேலும் கூட்டாக இணைந்து அப்பாவி பலஸ்தீன் மக்கள் மீது மேலும் போரை நடத்திக் கொண்டிருக்கின்றன.
உலகம் பூராகவும் இப்போரை நடத்த வேண்டாம் எனவும் அப்பாவி மக்களை கொல்ல வேண்டாம் எனவும் கடுமையாக எதிர்ப்புக்கள் கிளம்பி நிற்கின்றன. அந்த எதிர்ப்புக்களுடன் எமது ஆதரவையும் பலஸ்தீன மக்களுக்கு தெரிவிக்கின்றோம் என்றனர்.