கிராம உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில்

Share

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடாத்தப்படவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தெரிவு செய்யப்படுவோர் மூன்று மாதங்களுக்குள் நியமனம் செய்யப்படுவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைவாக, சுமார் 3000 கிராம அலுவலர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பரீட்சை எழுத சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் உள்ள தொலைதூர பிரதேசங்களில் விசேட தகைமையின் அடிப்படையில் பரீட்சையை நடாத்திய பின்னர், கிராம சேவையாளர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

2021 விண்ணப்பம் கோரப்பட்ட கிராம சேவையாளர் பதவி வெற்றிடத்திற்கான வர்த்தமானியை பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்?

https://gkiqmaster.com/grama-niladhari-vacancies-gazette-application-2021/

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு