இந்திய நிதி அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

Share

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்டு இந்திய தூதுக்குழுவினர் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்ததோடு இலங்கை மற்றும் இந்தியா இடையில் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் 15 மில்லியன் டொலர் அன்பளிப்புடன் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு