முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஐந்து செல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு பின்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தினை இன்று (1) சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வெடிபொருட்கள் இருப்பது தொடர்பாக முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அப்பகுதியில் காணப்பட்ட செல்கள் ஐந்தினை மீட்டுள்ளதுடன், அதனை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.