அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Share

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கை இன்று செவ்வாய்க்கிழமை (31) விசாரணைக்கு எடுத்தபோது தேரர் தமிழர்கள் மீதான இன வன்முறைகளை தூண்டும் விதமாக வெளியிட்ட கருத்துக்கள் இறுவெட்டில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி குறித்த தேரர் மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து வீதியால் சத்தமாக தெற்கிலுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலைய வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.

இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இந்த தேரரின் செயற்பாட்டை கண்டித்தது அவருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் 27 ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் பீற்றர் போல் இன்றைய தினம் வழக்கை விசாரணைக்கு எடுத்தக் கொண்டு தேரர் வெளியிட்ட கருத்துக்கள் வழங்கிய செவ்வியை இருவெட்டுக்களில் பதிவு செய்து 20 ம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வழக்கை விசாரணைக்காக ஒத்திவைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு