பிரபல பாடகர்களை இலங்கைக்கு வரவழைத்து மொட்டுக்கட்சியை பலப்படுத்த இசை நிகழ்ச்சி 

Share

கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு தரப்பினர் பிரபல பாடகர்களை இலங்கைக்கு வரவழைத்து மிகச்சிறப்பான முறையில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் நிலையில், நேற்று சுகததாச உள்ளக அரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின் பாடல்கள் மக்களை கவர்த்திருந்தன.

ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வருகையும், விற்பனையாகியிருக்கும் டிக்கட்களின் எண்ணிக்கையும் மிககுறைந்திருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.

மொட்டு கட்சியினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முன்னாயத்தங்களாக சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து தமிழ் மக்களிடமிருந்து விளையாட்டுதுறைக்கு பணம் சேகரிப்பதற்காகவும், வளர்ந்து வரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை சூழ்ச்சியான முறையில் தோற்கடித்து தமிழ் மக்களை திசை திருப்புவதற்குமாகவே அமைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அது மட்டுமன்றி பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் விருப்ப பாடல்கள் எத்தனையோ இருந்த போதிலும் அரசியல் பிரமுகர்களின் விருப்ப பாடல்களும், பார்வையாளர்களுக்கு இடையூறாகும் வகையில் இடைநடுவில் சிங்கள அரசியல்வாதிகளின் நடனங்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி, பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக நூற்றுக்கணக்கான இலவச டிக்கெட்டுகளை கொடுத்திருந்தனர் என்கிற தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு