ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பரந்த கூட்டணியை அமைக்க டலஸுக்கு புதிய பொறுப்பு

Share

எதிர்க்கட்சிகளின் பொது அரசியல் கூட்டணியை உருவாக்கி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பிரதான எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும தலைமையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் சுயேச்சையான தீர்மானங்களை எடுக்கவும் சுதந்திர ஜனதா சபை கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலோ அல்லது பொதுத் தேர்தலிலோ எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணியுடன் போட்டியிடுவது தொடர்பில் சுதந்திர ஜனதா சபை கவனம் செலுத்தியுள்ளதுடன் அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

டலஸ் அழகப்பெரும ஐக்கிய மக்கள் சக்தியுடன் முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னர் கூட்டணியின் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைள் குறித்து சுதந்திர ஜனதா சபைக்கு அறிவிப்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளில் பொது வேட்பாளராக களமிறங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ள டலஸ் அழகப்பெரும, அதற்காக சுதந்திர ஜனதா சபை என்ற கட்சியை உருவாக்கியுள்ளதுடன் எதிர்கட்சிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.

இருப்பினும் சஜித் பிரேமதாசவே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அதற்கு டலஸ் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள நிலையிலேயே டலஸ் தலைமையிலான அணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு