இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 37 இந்திய மீனவர்கள் கைது

Share

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதுடன், இழுவை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

சட்டவிரோத மீன்பிடி செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்பரப்பில் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களையும், அவர்களது இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்திலுள்ள நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்களையும்அவர்களது மூன்று விசைப்படகுகளையும் நேற்றைய தினம் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக கைதான மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 64 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 10 இந்திய இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு