இன முறுகலை தோற்றுவிக்க அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் முயற்சி ; உடன் கைது செய்ய வேண்டும்

Share

சமூகத்தில் இனவாதத்தை விதைத்து நாடெங்கும் பரப்பி மீண்டும் இன முறுகலை தோற்றுவிப்பதற்காக தொடர்ச்சியாக அடாவடி தனத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“மக்கள் மத்தியில் நற்சிந்தனைகளை விதைத்து, சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பௌத்த பிக்குகளுக்கு இருக்கின்றது. ஆனால் புத்தர் காட்டிய வழியைவிடுத்து, தடம்மாறி பயணிக்கும் பிக்குகளும் உள்ளனர்.

அவர்களில் முதன்மையானவர்தான் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர். காவி உடைக்குள் ஒளிந்துகொண்டு காட்டுமிராண்டித்தனமாக செயற்படுகின்றார். ‘வெட்டுவேன், கொத்துவேன்’ என மீன் சந்தையில் போன்று கூச்சலிட்டுக்கொண்டிருக்கின்றார்.

ஒருபுறம் இனவாதத்தை கக்கிவிட்டு,மறுபுறம் கதறி அழுது அனுதாபம் தேடுகின்றார். தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களை திசைதிருப்பும் முயற்சியாவவே இதனை பார்க்க முடிகின்றது.

விகாரையில் இருந்து நல்லதை போதிக்க வேண்டிய அவர், நடுவீதிக்கு இறங்கி தமிழர்களை வெட்டிவேன் என எச்சரித்து வருகின்றார். இவரது அடாவடித்தனம் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விடயமே. இவ்வாறு அடாவடித்தனமாக செயற்படும் அம்பிட்டிய சுமனரத்ன தேரரை பொலிஸாரும் வணங்கிவிட்டே செல்கின்றனர்.

இந்த நடவடிக்கைகளையெல்லாம் பார்க்கும் அம்பிட்டிய சுமன தேரரின் பின்புலத்தில் பாரியதொரு வலையமைப்பு இருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது விடயம் தொடர்பில் ஜனாதிபதியும், மகாநாயக்க தேரர்களும் உடன் தலையிட வேண்டும்.

இதனை சாதாரண நிகழ்வென நினைத்து ஜனாதிபதி அலட்சிய போக்கோடு செயற்படக்கூடாது. தேரர் என்ற போர்வையில் சண்டித்தனம் காட்டிவருகின்றார்.

தமிழர்களுக்கு பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுகின்றார்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டிய நபர் போலவே செயற்பட்டு வருகின்றார்.

எனவே, கடந்த காலங்களில் இந்நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை படிப்பிணையாகக்கொண்டு அம்பிட்டிய சுமன ரத்ன தேரரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/yyo4UC6BGH4?si=8FY6CE1XVxnn2h_d

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு