‘இஸ்ரேல் – ஹமாஸ் போர்’ 21ஆவது நாளாகவும் தொடரும் நிலையில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இன்று கல்முனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்று கூடிய மக்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தியும், துஆ பிராத்தனையில் ஈடுபட்டும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.
‘இஸ்ரேல் – ஹமாஸ் போர்’ நிறுத்தப்பட வேண்டுமென இலங்கையில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு நடவடிக்கை குழுவால் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/yyo4UC6BGH4?si=8FY6CE1XVxnn2h_d