புறக்கோட்டையில் உள்ள கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு வீதியில் உள்ள புடவைக் கடையொன்றில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 7 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.