சாணக்கியன் எம்.பியின் அலுவலகம் முற்றுகை; 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம்

Share

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் வெளிநாட்டு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு  சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சுமார் 8 கோடி ரூபாவினை போலி முகவர்களை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான எம்மை காப்பாற்றுமாறு கோரி  சாணக்கியனிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு வந்திருந்த குறித்த பணத்தை இழந்தவர்கள் சுமார் பல மணித்தியாலங்கள் சாணக்கியனிடம் சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவிக்கையில்,

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு என கூறி 185 பேரிடம் 8 கோடிகளுக்கு அதிகமாக மோசடி வெய்யப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தில் உள்ள சிலரால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக பாடசாலை மாணவன் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகின்றது.

தற்போது இவ்விடயம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கலந்துரையாடினேன். தற்பொழுது இவ்வாறான மோசடிகள் அதிகளவாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு