பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் பாரிய போராட்டம்

Share

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இடையிலான மோதலைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் சுமார் 100,000 பேர் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘சுதந்திர பலஸ்தீனம்’ எனும் சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பிரித்தானிய பிரதமர் Rishi Sunak, அமெரிக்க ஜனாதிபதி Joe Biden மற்றும் இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu ஆகியோருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் பாதுகாப்புப் படையினரையும் நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு