மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்களிடம் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தினால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும், தான் பயணிக்கும் அனைத்து இடத்திலும் தமது சிரமங்களை வெளிப்படுத்தி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், கட்சியில் பல இளைஞர்கள் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் உருவாகுவார் என்றும் கூறினார்.