தீபாவளி கொடுப்பனவாக தோட்டத்தொழிலாளர்களுக்கு இருபதாயிரம் ரூபா வழங்கப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;
கடந்த முறையை விட இம்முறை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது எனவே தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.எனவே மலையகத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இருபதாயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென கம்பனிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.