சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற அங்குருவாத்தோட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற பெண் ஒருவரே இவ்வாறு மூன்று மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி கிராம அலுவலர் மூலம் தெரிய வந்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
ஹொரணை அகுருவத்தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான இருஷிகா சந்தமாலி, மருதானை பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக 2021 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
இலங்கையின் உள்ள தனது பிள்ளைகளுடனும் சகோதரனுடனும் எப்போதும் தொலைபேசியில் பேசும் இருஷிகா மூன்றரை மாதங்களுக்கு முன்னர் கடைசியாக தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
ஆனால் இருஷிகா தனது முதலாளிகளுடன் வெளியூர் செல்வது சகஜம் என்றும், பல மாதங்களாக குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசாமல் இருப்பதும் சகஜம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இருஷிகாவின் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்த உறவினர்கள் துரதிஷ்டவசமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிய நேரிட்டது.
இது குறித்து மதுராவளை கிராம அதிகாரி அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இருஷிகா 18 ஜூலை 2023 அன்று இறந்துவிட்டதாக கிராம அதிகாரி தெரிவித்ததாக இருஷிகாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி, உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் விசாரித்த போது, போலி கடவுச்சீட்டு மூலம் இருஷிகாவை தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதனால், இருஷிகா பற்றிய எந்தத் தகவலும் தமக்கு தெரியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்திருந்தது.
இதேவேளை, இருஷிகாவின் மரணம் சந்தேகத்திற்குரியது என வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இருஷிகாவின் உறவினர்கள் அங்குருவாத்தோட்டை லிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
https://youtu.be/hZ6U-mBlZzg?si=Zuor8H0l53kZ2iSn