தமிழ் மக்களை ஹர்த்தாலுக்கு அழைத்துவிட்டு தமது கருமங்களை செய்ய சென்ற தமிழ் எம்.பிக்கள்!

Share

தமிழ் கட்சிகளால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் நேற்றையதினம்(20) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஹர்த்தாலை புறந்தள்ளி தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு விடுத்த அச்சுறுத்தல் மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல்தரை அபகரிப்பு போன்ற தமிழர் பகுதி ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பை ஏற்று நேற்றையதினம் வடக்கு கிழக்கு எங்கும் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில், மக்களை வேலைகளை பகிஷ்கரித்து பூரண ஹர்தாலை அனுஷ்டிக்கும்படி வேண்டுகோள் விடுத்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்றையதினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

நேற்றைய ஹர்த்தாலால் வர்தகர்கள் , ஓட்டோ சாரதிகள், தனியார் பஸ் சாரதிகள், தொழிலாளர்கள் முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வேண்டி தமது வேலைகளைப் பகிஷ்கரிப்பு செய்ய அறிக்கைவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தானே அந்த வேண்டுகோளை மீறி நாடாளுமன்றம் சென்றமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதன் காரணமாக அவர்மீது தமிழரசுக் கட்சி கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா? என கட்சித் தலைவரான மாவை.சேனாதிராஜாவிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அறியமுடிகின்றது.

ஊருக்கு உபதேசம் தனக்கு இல்லை என்றவகையில் தமிழ் பொதுமக்களுக்கு ஒருநீதி, தமிழரசுக்கட்சித் தலைவர்களுக்கு ஒரு நீதியா? என சமூகவலைத்தளங்களில் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனம் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/hZ6U-mBlZzg

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு