பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்றைய தினம் சம்மாந்துறை பிரதேசத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.
‘இஸ்ரேல்-பலஸ்தீனத்திற்கு இடையிலான போரில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக “சம்மாந்துறை மக்களின் அழுகை குரல் ” எனும் தொனிப்பொருளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் அமைதியான முறையில் இடம்பெற்றதுடன், பலஸ்தீன கொடிகளும் பறக்கவிடப்பட்டது.
இஸ்ரேல்-பலஸ்தீனத்திற்கு இடையிலான போர் இன்றுடன் 15 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலகளவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.