நடிகர் சித்தார்த் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.
தென்னிந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் ‘யாழ் கானம்’ இசைநிகழ்ச்சி நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள இசைத்துறையை சார்ந்தவர்களும், சந்தோஷ் நாராயணனின் குழுவினரும் ஒன்றிணைத்து நடாத்தும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்வு, வெளிநாடுகளில் உள்ளவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், தென்னிந்திய பிரபலங்கள் பலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், இலங்கை வந்திருக்கும் நடிகர் சித்தார்த்தின் ”சித்தா” திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.