இலங்கையின் முன்னாள் ரக்பி நட்சத்திரம் சுமந்திரன் காலமானார்

Share

இலங்கையின் முன்னாள் ரக்பி நட்சத்திரம் சுமந்திரன் (சும்மா) நவரத்தினம் தனது 98வது வயதில் (19) காலமானார்.

றோயல் கல்லூரியில் தெரிவான நவரத்தினம் 1940 மற்றும் 1950 களில் இலங்கை ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

‘All-White Sri Lanka’ என்று அழைக்கப்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மூன்று உள்ளூர் பூர்வீக இலங்கையர்களில் நவரத்தினமும் ஒருவர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த நவரத்தினம் 1950 களில் CR மற்றும் FC அணிகளுக்கு நட்சத்திர வீரராக இருந்தார், குறிப்பாக 1954 இல் கிளிஃபோர்ட் கோப்பை வெற்றிகொள்ள அணியை வழிநடத்தினார்.

நவரத்தினம் பல ஆண்டுகளாக றோயல் கல்லூரிக்கு தனது சேவைகளை இலவசமாக வழங்கினார்.

1972 இல் இலங்கை ரக்பி ஒன்றியத்தின் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974 இல் இலங்கை ரக்பி ஒன்றியத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை ரக்பி கால்பந்து ஒன்றியம் (SLRFU) என மறுபெயரிடப்பட்ட போது இலங்கையின் ரக்பி கட்டுப்பாட்டு அமைப்பின் முதல் தலைவராகவும் இருந்தார்.

நவரத்தினம் பல சாதனைகளை முறியடித்து பல பதக்கங்களை வென்ற இலங்கையின் சிறந்த தடகள வீரராகவும் இருந்தார். இந்தியாவில் இடம்பெற்ற ஆடவர் 100மீ ஓட்டத்தில் 10.04 வினாடிகளில் ஓடியதன் மூலம் அவர் ஆசியாவின் வேகமான மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு