இன்று கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள் நடைபெறுமா?

Share

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரியும் வடகிழக்கு இணைந்த ஹர்த்தால், கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் கட்சிகள் வர்த்தக சங்கம்,அரச ஊழியர், பொதுமக்கள் என்போருக்கு கோரிக்கை விடுத்திருந்த போதிலும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாம் தவணை பரீட்சையை இன்று(20) பிற்போட கிழக்கு மாகாண கல்வி வலயங்களால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

இது அரசின் உத்தியோக பூர்வ அறிவிப்பு இல்லை என்ற காரணத்தினால் , ஒரு வேளை நாளை முற்றுமுழுதாக மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்றால் பரீட்சை பிற்போடப்படுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு எனவும்,மாணவர்கள் சமூகம் அளிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக பரீட்சையை நடத்த வேண்டிய கட்டாயம் உண்டு எனவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் இன்றைய (20) ஹர்த்தாலுக்கு சாரதிகள் ஒத்துழைப்பு வழங்கினால் அது பாடசாலை மாணவர்களின் பரீட்சை வரவிலும் தாக்கம் செலுத்துமென தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு