புத்தர் சிலையை தான் பார்க்க வேண்டுமெனவும் அங்கு செல்ல எனக்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அண்மையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலையை வைத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த புத்தர் சிலை அங்கு இல்லையென செய்திகள் வெளியிாகி இருந்த நிலையில், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் குறித்த இடத்திற்கு இன்று சென்றுள்ளார்.
ஆனால் அங்கு பதற்ற நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்பட்டதால் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் குறித்த பகுதிக்கு செல்வதற்கு அம்பிட்டிய சுமணரத்தன தேரருக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையிலேயே அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் சிலையை நான் பார்க்க வேண்டும். அங்கு செல்ல எனக்கு அனுமதிக்க வேண்டும் என பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர்
பன்சாலைக்கு செல்வதற்கு தான் உங்களிடம் கேட்டேன். ஆனால் நீங்கள் என்னை பன்சாலைக்கு போகவிடாமல் தடுக்கின்றீர்கள். நான் அணிந்திருக்கும் காவி உடைக்கு நீங்கள் மரியாதை வழங்குகின்றீர்கள் இல்லை பொலிஸாரிடம் தேரர் கேட்கின்றார்.
அதற்கு பொலிஸார் , நாம் மரியாதை வழங்குகின்றோம் என கூறுகின்றனர். அதற்கு தேரர் மரியாதை வழங்குகின்றீர்கள் என்றால் ஏன் என்னை பன்சாலைக்கு செல்ல அனுமதிக்கின்றீர்கள் இல்லை. என்கின்றார். அதற்கு அங்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் என பொலிஸார் தேரரிடம் கூறுகின்றனர்.
சாணக்கியன் குழுவினரே புத்தர் சிலையை புதன்கிழமை (18) இரவு எடுத்துச் சென்றுள்ளனர் என தேரர் கூறுகிறார்.
காக்கிக்ச் சட்டை அணிந்த பொலிஸார் கிழக்கு மாகாணத்தில் எங்களை எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர் என அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் கூறுகின்றார்.
சாணக்கியன் பொய்களை கூறுகின்றார். நாம் இதுவரைக்கும் எந்த அரசியல்வாதிகளுடனும் இணைந்து செயற்படவில்லை என்றார்.