ஹர்த்தாலுக்கு  கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவில்லை

Share

ஹர்த்தாலுக்கு எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்கவில்லை எனவும் வழமை போன்று சந்தையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீர் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கில் நாளைய தினம் (20) ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது:

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது தொடர்பில் எமக்கு தெரியாது.எம்மை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.இவ்விடயம் தொடர்பில் எந்த தரப்பும் எம்மை தொடர்பு கொண்டு கலந்துரையாடவில்லை.எதற்காக ஹர்த்தால் செய்கின்றார்கள் என்பது கூட எமக்கு தெரியாது.ஆனால் தற்போது கூட ஹர்த்தால் தொடர்பில் ஆதரவு கேட்டால் அதன் நோக்கம் பற்றி உரிய தரப்பிடம் கேட்போம்.எனினும் எமது சந்தை வழமை போன்று நாளை (20) இயங்கும் என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு