வட, கிழக்கு ஹர்த்தாலுக்கு தமிழரசுக்கட்சி பூரண ஆதரவு

Share

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழரசுக்கட்சி பூரண ஆதரவு அளிக்கவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த திரு சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இந்த கடையடைப்பு நடவடிக்கை மூலம் தமிழ் நீதிபதி ஒருவருக்கு நிகழ்ந்த இந்த மிக மோசமான செயற்பாட்டை திரும்ப திரும்ப உலகுக்கு எடுத்தக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஆகவே, இது சம்பந்தமாக அனைவரினது ஒத்துழைப்பையும் முழுமையாக எதிர்பார்க்கிறோம் என்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு